×

சென்னையில் 4 விமான சேவை ரத்து


சென்னை: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று காலை தனியார் பயணிகள் விமானம், 184 பயணிகளுடன் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்தபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் மீண்டும் அகமதாபாத் விமான நிலையத்திலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது. கோளாறை உடனடியாக சரி செய்ய முடியாததால் விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால், சென்னையில் இருந்து ஐதராபாத் செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது. மேலும் நேற்று மாலை 6.15 மணிக்கு, ஐதராபாத்தில் இருந்து சென்னை வர வேண்டிய தனியார் பயணிகள் விமானம், மீண்டும் சென்னையில் இருந்து அகமதாபாத்திற்கு இரவு 9.05 மணிக்கு செல்ல வேண்டிய அந்த தனியார் பயணிகள் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

இவ்வாறு சென்னை விமான நிலையத்தில் நேற்று வருகை, புறப்பாடு என 4 விமானங்கள் ரத்தானதால் அகமதாபாத், ஐதராபாத் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த விமானங்களில் பயணிக்க இருந்த பயணிகளுக்கு, டிக்கெட் கட்டணங்கள் முழுமையாக திருப்பிக் கொடுக்கப்படும், பயணிகள் விருப்பப்பட்ட வேறு தேதிகளில் பயணம் செய்யும்படி டிக்கெட்கள் மாற்றி கொடுக்கப்படும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

The post சென்னையில் 4 விமான சேவை ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ahmedabad ,Gujarat ,Ahmedabad Airport ,
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...